குட்டை நீரில் மூழ்கி பள்ளி மாணவன் ஒருவன் சாவு
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள சின்னவெண்மணி கிராமம் காலனித்தெருவை சேர்ந்த சக்திவேல் மகன் வெற்றிவேல் (8). இவர், அதே கிராமத்தில் உள்ள சிதம்பரம் மானிய நடுநிலைப் பள்ளியில் 3-


பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே குட்டை நீரில் மூழ்கி பள்ளி மாணவன் ஒருவன் உயிரிழந்தது, ஞாயிற்றுக்கிழமை இரவு தெரியவந்தது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள சின்னவெண்மணி கிராமம் காலனித்தெருவை சேர்ந்த சக்திவேல் மகன் வெற்றிவேல் (8). இவர், அதே கிராமத்தில் உள்ள சிதம்பரம் மானிய நடுநிலைப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை விளையாடச் சென்ற வெற்றிவேல், வீட்டிற்கு திரும்பி வரவில்லையாம். இதையறிந்த அவனது பெற்றோர், அவர்களது உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம். இதனிடையே, அங்குள்ள குட்டையில் வெற்றிவேல் இறந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை இரவு தெரியவந்தது.
இதையடுத்து, வெற்றிவேலின் சடலத்தை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, பெரிய வெண்மணி கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் அளித்த புகாரின்பேரில், குன்னம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலாஜி வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...